முதுமையிலும் ஓயாத ஓட்டம்.. 80 வயதில் 16 மணி நேரம் டாக்ஸி ஓட்டும் முதியவர்!

சொந்த வாகனம் இல்லாததால் தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன வாடகையாகச் செலுத்த வேண்டும்
Kolkata TaxiDriver
Published on

கொல்கத்தாவை சேர்ந்த 80 வயது டாக்சி டிரைவர் சைதாலி போஸ் என்ற பயனர் 80 வயதான டிரைவர் ரவீந்திரநாத் சர்க்கார் என்ற டிரைவரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி உள்ளார்.

தினமும் காலை 6 மணிக்கு, ரவீந்திரநாத் சர்க்கார் வாடகை டாக்சியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்க தொடங்குகிறார்.

வாழ்வாதாரத்திற்காகத் தொடரும் போராட்டம்:

கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயது டாக்ஸி ஓட்டுநர் ரவீந்திரநாத் சர்க்காரின் கடினமான வாழ்க்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சைதாலி போஸ் என்ற பயனர், இந்த மூத்த ஓட்டுநரின் அன்றாட வாழ்க்கையையும், அவரது 77 வயது மனைவியுடன் வசிக்கும் எளிய சூழலையும் நேரில் கண்டு பகிர்ந்துள்ளார்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓயாத உழைப்பு:

தினமும் காலை 6 மணிக்குத் தனது வாடகை டாக்ஸியில் கொல்கத்தா வீதிகளில் பயணிக்கத் தொடங்கும் ரவீந்திரநாத், சுமார் 16 மணி நேரக் கடுமையான வேலைக்குப் பிறகு இரவு 10 அல்லது 11 மணி அளவிலேயே தனது வீட்டிற்குத் திரும்புகிறார்.

தினசரிச் செலவுகள்:

கடந்த 52 ஆண்டுகளாகத் தொடர்ந்து டாக்ஸி ஓட்டி வரும் இவர், சொந்த வாகனம் இல்லாததால் தினசரி ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன வாடகையாகச் செலுத்த வேண்டும்.

அதோடு எரிபொருள் செலவுகளையும் அவரே ஏற்பதால், இச்செலவுகளுக்குப் பின் கையில் மிகக் குறைந்த பணமே எஞ்சுகிறது.

மருந்து வாங்கக்கூடப் பணமின்றித் தவிப்பு:

வயதான காரணமாகக் கைகள் நடுங்கினாலும், மூச்சுவிடச் சிரமப்பட்டாலும் பசியற்ற வாழ்க்கைக்காக மிகுந்த சிரமத்துடன் அவர் வாகனம் ஓட்டி வருகிறார்.

கையில் போதியப் பணம் இல்லாததால், தனக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளைக்கூட அவரால் வாங்க முடிவதில்லை.

"உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்":

கட்டணத்தைப் பொறுத்தவரை, இவர் பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டு வற்புறுத்துவதில்லை. மாறாக, அவர்களிடம் மிகுந்த எளிமையுடன், "உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தொகையைக் கொடுங்கள்" என்று கூறி நெகிழ வைக்கிறார்.

முதிய தம்பதிக்குக் குவியும் நெட்டிசன்களின் ஆதரவு:

இந்த முதிய தம்பதியின் வறுமை நிலையை அறிந்த பலர், அவர்களுக்கு உதவ முன்வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் பலர், அந்த முதிய தம்பதிக்குத் தங்களால் இயன்ற நிதி உதவிகளையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com