7 ஆண்டு சிறை.. குழந்தை, தாயின் மதத்தையே சேரும். கடும் விதிகளுடன் மகாராஷ்டிராவில் தாக்கலானது மத மாற்ற தடை மசோதா

மகாராஷ்டிர முதல்வர்
மகாராஷ்டிர முதல்வர்
Published on
Summary

மகாராஷ்டிர அரசு 'மகாராஷ்டிர மத சுதந்திர மசோதா 2026' என்ற மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.

மகாராஷ்டிர அரசு 'மகாராஷ்டிர மத சுதந்திர மசோதா 2026' என்ற மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.

மசோதாவின்படி, திருமணத்தின் பெயரில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

அதே தவறை தொடர்ந்து செய்தால் 10 ஆண்டு சிறையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மதமாற்றம் செய்யப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் அல்லது உறவினர்கள் யார் புகார் அளித்தாலும், காவல்துறை அதை கட்டாயம் வழக்காக பதிவு செய்யவேண்டும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும்.

மதம் மாற விரும்புபவர்கள், அது குறித்து 60 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

சட்டவிரோத மதமாற்றத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தை, அந்தத் திருமணத்திற்கு முன்பு தாய் எந்த மதத்தைப் பின்பற்றினாரோ, அந்த மதத்தை சேர்ந்ததாகவே கருதப்படும். ஒரு வேலை பெற்றோர் பிரிந்தால் குழந்தை தாயிடமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரும் இந்தியாவின் 10 வது மாநிலமாக மகாராஷ்டிரா மாறும்.

ஏற்கனவே உபி, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

அரசியலமைப்பு வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை என்பது பொது ஒழுங்குக்கு உட்பட்டது என இந்த மசோதாவின் அறிமுக உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com