ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய இந்திய மாலுமிகள் 7 பேர் விடுவிப்பு

3 மாதங்களுக்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய 7 இந்திய மாலுமிகள் உள்பட 14 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய இந்திய மாலுமிகள் 7 பேர் விடுவிப்பு
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய இந்திய மாலுமிகள் 7 பேர் விடுவிப்பு
Published on

புதுடெல்லி:

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைப்பற்றினர். கப்பலில் இருந்த 7 இந்திய மாலுமிகள் உள்பட வெளிநாட்டினரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர். 

இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் 7 இந்திய மாலுமிகள் உள்பட 14 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனை ஓமன் நாட்டு வெளியுறவு மந்திரி அல்புசைதி உறுதிப்படுத்தினார். மீட்கப்பட்ட 14 பேர் மஸ்கட்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com