ஒரே நாளில் சீரடியில் ரூ.6.25 கோடி வசூல்

குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம்205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.
ஒரே நாளில் சீரடியில் ரூ.6.25 கோடி வசூல்
Published on

மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்றைய நாளில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் பணம் உள்ளிட்டவற்றை அளித்தனர்.

குரு பூர்ணிமா நாளில் ரூ.6.25 கோடி உண்டியல் வசூலானது. மேலும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

இது தவிர கடந்த 3 நாட்களில் 205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com