தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 52 பேர் கைது- சென்னையில் தங்கியிருந்த வாலிபரும் சிக்கினார்

போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 52 பேர் கைது- சென்னையில் தங்கியிருந்த வாலிபரும் சிக்கினார்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.

அவர் 13 வயதில் இருந்து பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மாணவி குற்றம் சுமத்திய 62 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்தனர். பத்தினம்திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் வீராங்கனையை சீரழித்த அவரது காதலன், காதலனின் நண்பர்கள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். நேற்று முன்தினம் வரை 44 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலையாளப்புழாவை சேர்ந்த அபிஜித் என்ற வாலிபரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 2பேர் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.

விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com