ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்- போட்டிபோட்டு எடுத்த பொதுமக்கள்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.யாரும் பணம் எடுக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்- போட்டிபோட்டு எடுத்த பொதுமக்கள்
Published on

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், யாகுத் புரா பகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம் .கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக 4 ஆயிரம் வந்தது.

அதேபோல் மற்றொரு நபருக்கும் ரூ. 3 ஆயிரத்திற்கு பதிலாக 4 ஆயிரம் வந்தது. ஆனால் அவர்களின் கணக்கில் ரூ.3000 மட்டும் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த தகவல் காட்டு தீ போல் அப்பகுதியில் பரவியது. இதனால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

ஒவ்வொருவரும் போட்டி போட்டு பணத்தை எடுத்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவு கூட்டம் கூடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஏடிஎம் எந்திரத்தை சோதனை செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிக அளவில் பணம் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தை மூடினர். மேலும் யாரும் பணம் எடுக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com