ஆந்திராவில் மழையால் வீடு இடிந்து 4 பேர் பலி

குடும்பத்தினர் இடிப்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் மழையால் வீடு இடிந்து 4 பேர் பலி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், சின்ன வங்காலை சேர்ந்தவர் குருசேகர ரெட்டி (வயது 45) கூலி தொழிலாளி.இவரது மனைவி தஸ்தகீரம்மா (38). மகள்கள் பவித்ரா (16), குரு லட்சுமி (10). குருசேகர ரெட்டி குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

தற்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் குருசேகர ரெட்டியின் வீட்டு மண் சுவர் மழையில் நனைந்து நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.

இதில் குருசேகர ரெட்டியின் குடும்பத்தினர் இடிப்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளை அகற்ற முயன்றனர்.

போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இன்று காலை இடிப்பாடுகளை அகற்றினர். அப்போது குருசேகர ரெட்டி, அவரது மனைவி, 2 மகள்கள் பிணமாக மீட்கபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com