கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்ற 3 எம்.பிக்கள்

பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் 20-வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக மூவரும் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
கோத்தபய ராஜபக்‌ஷே
கோத்தபய ராஜபக்‌ஷே
Published on

கொழும்பு:

இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்குவதாக முஸ்லிம் சமூகத்தைச் 3 எம்பிக்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் 20-வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக மூவரும் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவு அளித்து வந்தனர். தற்போது ஆதரவை விலக்கிய அவர்கள், இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயேச்சை எம்.பி.க்களாகவே இருப்போம் என்றும் தெரிவித்தனர். 

இது கோத்தபய ராஜபக்‌ஷே அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com