புல்வாமா என்கவுண்டர்: 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா மாவட்டம் டிராப்கம் பகுதியில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்ததுகொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
துப்பாக்கி சண்டை நடந்த பகுதி
துப்பாக்கி சண்டை நடந்த பகுதி
Published on

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் மற்றும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அவ்வகையில் நேற்று புல்வாமா மாவட்டம் டிராம்கம் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாகிகளை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில்,

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில் அவர்கள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த ஆண்டுதான் இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்ததும் தெரியவந்தது.

இந்த ஆண்டில் இதுவரை 99 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐஜி விஜய குமார் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com