பாகிஸ்தானுக்குள் ஏவுகணை விழுந்த விவகாரம் - 3 விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம்

பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக விழுந்தது.இந்த விவகாரத்தில் 3 விமானப்படை அதிகாரிகள் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் ஏவுகணை
Published on

புதுடெல்லி:

பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்துக்கு அந்நாடு கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே, இந்த ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. அது ஒரு விபத்து. உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட 3 விமானப்படை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com