வீட்டின் தண்ணீர் தொட்டியில் 27 பாம்புகள்: குடும்பத்தினர் அதிர்ச்சி

பாம்பு மீட்பாளர்கள் தொட்டியில் இருந்து 27 பாம்புகளை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அவற்றை ஒரு பெட்டியில் வைத்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
வீட்டின் தண்ணீர் தொட்டியில் பாம்புகள்
Published on

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே சராய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. குடும்பத்தினர் நீண்ட காலமாக தண்ணீர் தொட்டியைப் பயன்படுத்தாமல் இருந்தனர். இதனால், தொட்டியில் அதிக அளவில் குப்பைகளும் சேறும் சேர்ந்தன.

நேற்று தொட்டியை பார்வையிட்டனர். அதில் அதிக எண்ணிக்கையில் பாம்புகள் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் பாம்பு மீட்பாளர்கள் வீட்டிற்கு வந்தனர். பாம்பு மீட்பாளர்கள் தொட்டியில் இருந்து 27 பாம்புகளை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அவற்றை ஒரு பெட்டியில் வைத்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இது குறித்து பாம்பு மீட்பாளர்கள் கூறுகையில், "அவை தண்ணி பாம்புகள். அவற்றுக்கு விஷமில்லை. அவை குளங்கள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் காணப்படுகின்றன.

அவை தவளைகள், மீன்கள் மற்றும் சிறிய பூச்சிகளை உண்டு வாழ்கின்றன," என்று தெரிவித்தனர். இருப்பினும், பாம்புகள் தொட்டிக்குள் எப்படி வந்தன என்பது ஒரு மர்மமாகியுள்ளது.

தற்போது அந்தப் பாம்புகளின் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com