சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Published on

சத்தீஸ்கர் மாநிலம் கான்சேர் மாவட்டம் கோயாலி பேடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

இதில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் 2 நக்சலைட்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com