இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விற்பனையை நிறுத்திய பானாசோனிக் நிறுவனம்

பணிநீக்கங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.போட்டி நிறுவனங்களான வேர்ல்பூல், வால்டாஸ் பங்குகள் பங்குகள் உயர்ந்தன.
இந்தியாவில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விற்பனையை நிறுத்திய பானாசோனிக் நிறுவனம்
Published on

ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

பானாசோனிக் இனி வீட்டு ஆட்டோமேஷன், ஏசி, பி2பி தீர்வுகள் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தவுள்ளது. ஊழியர் பணிநீக்கங்கள் இருக்கும் என்றும், ஆனால் வாடிக்கையாளர் சேவை தொடரும் என்றும் பானாசோனிக் தெரிவித்துள்ளது.

அரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள தனது தொழிற்சாலையில் இந்த தயாரிப்புகளுக்கான உற்பத்தி யூனிட்களை பானாசோனிக் மூடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பானாசோனிக்கின் இந்த முடிவால் போட்டி நிறுவனங்களான வேர்ல்பூல், வால்டாஸ் பங்குகள் நேற்று முதல் உயர்ந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com