

கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 4.7% க்கும் மேல் சரிந்து பேரல் ஒன்றுக்கு 83 டாலருக்கும் கீழ் குறைந்தது.
இவற்றின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் வார தொடக்கமான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் 1,100 புள்ளிகள் உயர்ந்து தற்போது 76,703 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 351.10 புள்ளிகள் உயர்ந்து 23,974 என்ற புள்ளிகளை எட்டியது.
பங்குச்சந்தை ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று 94.68 ஆக வலுவடைந்தது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இது 95.11 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.