

தற்போது சில்லரை விற்பனை கடைகளில் 8 ரூபாய்க்குஒரு முட்டை விற்கப்படுவதால் இனி வரும் நாட்களில் முட்டை விலை குறையும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை வரலாற்றில் உச்ச பட்சமாக கடந்த 16 -ந்தேதி 680 காசுககளாக முட்டை விலை உயர்ந்தது. பின்னர் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த 8 நாட்களாக அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
இதில் முட்டையின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது கடந்த மாதம் 7 கோடியாக இருந்த முட்டையின் உற்பத்தி தற்போது 8 கோடியை நெருங்கி உள்ளதால் முட்டைகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்ய்பட்டது. இதையடுத்து 680 காசுகளாக இருந்த முட்டை விலை 30 காசுகள் சரிந்து 650 காசுகளான நிர்ணயிக்கப்பட்டது.
இந்த விலை சரிவு இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது. தற்போது சில்லரை விற்பனை கடைகளில் 8 ரூபாய்க்குஒரு முட்டை விற்கப்படுவதால் இனி வரும் நாட்களில் முட்டை விலை குறையும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ 134 ரூபாயாகவும், முட்டை கோழி விலை ஒரு கிலோ 120 ரூபாயாகவும் நீடிக்கிறது.