காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி- இந்திய வீரர் ரோகித் வெண்கலம் வென்றார்

92 கிலோ குத்துச் சண்டை போட்டி இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் சாகர் தகுதி,மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலம் வென்றார்.
ரோகித் டோகஸ்
ரோகித் டோகஸ்
Published on

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேபோல் ஆண்களுக்கான 92 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாகர், நைஜீரியாவின் இஃபியானிவை எதிர் கொண்டார். இப்போட்டியில் சாகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  

ஆண்களுக்கான 97 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 10-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்திய தீபக் நெஹ்ரா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com