காமன்வெல்த் போட்டி - 100 ரன்கள் வித்தியாசத்தில் பார்படோசை வீழ்த்தியது இந்தியா

முதலில் ஆடிய இந்தியா 162 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய பார்படோஸ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அரை சதமடித்த ஜெமிமா
அரை சதமடித்த ஜெமிமா
Published on

பர்மிங்காம்:

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் மோதியது. 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற இலக்குடன் பார்படோஸ் அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசி விக்கெட்களை கைப்பற்றினர். இறுதியில் பார்படோஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்தியா சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 3 போட்டியில் இந்தியா 2 வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com