நாய்கள் ஏன் மனிதர்களை நாவால் வருடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா...?

உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது.
நாய்கள் ஏன் மனிதர்களை நாவால் வருடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா...?
Published on

நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை, நிச்சயம் கொஞ்சி மகிழ்ந்திருப்பீர்கள். அதேபோல, உங்களது நாயும், உங்களோடு விளையாடி இருக்கும்.

அதுசரி...! நாய்கள் ஏன் மனிதர்களை கொஞ்சி, முத்தம் கொடுக்கிறது, நாவால் வருடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா...? அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

* குட்டி நாய்கள் பசிக்கும்போது, அதை வெளிப்படுத்த தெரியாமல், உரிமையாளரை கொஞ்சி நாவால் வருட ஆரம்பிக்குமாம். ஆகவே உங்கள் வீட்டில் குட்டி நாய் இருந்தால், அது உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.

* சில நேரங்களில் நாய்கள் தங்களது உணர்ச்சியை முத்தம் கொடுத்தும், நாவால் வருடுவதன் மூலமும் வெளிப்படுத்தும். உதாரணமாக, வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினாலும், கடைகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாலும் நாய்கள் ஓடி வந்து, உங்களை கொஞ்ச ஆரம்பிக்கும். ஏனெனில் அது உங்களை அவ்வளவு நேசிக்கிறது. ஆகவே நீங்கள் வந்த சந்தோஷத்தை கொஞ்சுவதன் மூலம் வெளிப்படுத்துகிறது.

* நாய்களுக்கு காயம் அல்லது வலி இருந்தால், அதனை சரிசெய்ய, அது தம்மை தாமே நாவால் வருடிக்கொள்ளும். ஏனெனில் நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது. இருப்பினும் அதிகமாக நக்கும்போது, அது காயத்தை இன்னும் பெரியதாக்கிவிடும். எனவே நாய்கள் அப்படி காயத்தின் மீது நாவால் வருட ஆரம்பித்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

* மனிதர்களின் உடலில் சுரக்கும் உப்பின் சுவையானது நாய்களுக்கு பிடிக்கும். அதன் காரணமாகவும், நாய்கள் அவ்வப்போது நாவால் வருடுகின்றன.

* நாய்கள் கூட மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும். இத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு, நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்துவதற்கு, நாய்கள் தம்மை தாமே நாவால் வருட ஆரம்பிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com