பிஎஸ்என்எல் 4ஜி வெளியீட்டில் மீண்டும் தாமதம்

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வேகமாக வெளியிட்டு வருகின்றன.
பிஎஸ்என்எல் 4ஜி வெளியீட்டில் மீண்டும் தாமதம்
Published on

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் 5ஜி நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட துவங்கின. இரு நிறுவனங்களும் 5ஜி வெளியீட்டில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

எனினும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என பலமுறை தகவல்களை வெளியாகின. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலேயே பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என தெரிகிறது.

தற்போதைய நிதியாண்டின் இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு நடைபெற மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்பட்டது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து டெல்டிங்கை நடத்தி முடித்தது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு சார்பில் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மெட்ரோ பகுதிகளில் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்டிஎன்எல் நிறுவனம் தற்போதைய இணைப்புகளிலேயே கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 4ஜி வெளியீடு தாமதமாகி இருப்பதை அடுத்து பிஎஸ்என்எல் 5ஜி சேவை வெளியீடு மேலும் தாமதமாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com