உயர்கல்வி படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கூறும் `எய்தவன்'

கலையரசன் - சாதனா டைட்டஸ் இணைந்து நடித்திருக்கும் `எய்தவன்' படத்தில், சமூகத்தில் தற்போதைய முக்கிய பிரச்சனையாக வலம் வரும் உயர்கல்வியை கொடுப்பத்தில் ஏற்படும் சிக்கல் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
உயர்கல்வி படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கூறும் `எய்தவன்'
Published on

ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா, ராதா உள்பட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில், தற்போதைய முக்கிய பிரச்சனையான மருத்துவத்தை படிக்க சென்று, அதனால் பாதிக்கப்படும் 16 பேரை மையமாக வைத்து கதை நகர்கிறது. அந்த சம்பவத்தால் பாதிக்கப்படும் அனைவரும், அதிலிருந்து தப்பவே முயற்சி செய்கிறார்கள்.

அதில் ஒருவர் நாயகனின் தங்கை. தங்கையின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் உருவாகும் பிரச்சினைகயைும், சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளும், அதை எதிர்கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே ‘எய்தவன்’ படத்தின் கதை.

X

Maalai Malar
www.maalaimalar.com