மலேசியாவில் வெளியாகும் ஈழ தமிழர்கள் திரைப்படம்

எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் வினோத் கிஷன், லீமா பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யாழ்’ திரைப்படம் மலேசியாவில் வெளியாக உள்ளது.
மலேசியாவில் வெளியாகும் ஈழ தமிழர்கள் திரைப்படம்
Published on

தமிழ் ஈழத்தை பின்னணியாக கொண்ட படம் ‘யாழ்’. “சமீபத்தில் வெளிவந்த இந்த படம் தமிழ் மக்களின் இதயத்தை தொட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழ் திரை உலகிற்கு புதிய அந்தஸ்து கிடைத்திருக்கிறது. வன்முறை, கொடூரம், ஆபாசம் இல்லாமல், குடும்பத்துடன் பார்க்கும் தமிழ் உணர்வு மிக்க திரைப்படம் என்ற பாராட்டை பெற்றுள்ளது. தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது” என்று படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது பற்றி கூறிய ‘யாழ்’ பட இயக்குனர் எம்.எஸ். ஆனந்த்...

“இலங்கை தமிழர்கள் போருக்கு முன்பு இருந்த எதார்த்தம் கலந்த நிலையை கூறும் படம் இது. மிக்க உலகத்தரம் ஈழத்தமிழர்களைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் இது தான். தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் ரசிகர்களை ஈழ மண்ணிற்கு இரண்டு மணி நேரம் கொண்டு சென்ற முதல் ஈழத்தமிழ் திரைப்படம். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து மலேசியாவில் வரும் 30-ந் தேதி இந்த படம் வெளியாகிறது” என்றார்.

இந்த படத்தில் வினோத் கி‌ஷன், பாலாஜி, லீமாராணி, லீமா பாபு உள்ளிட்ட இலங்கை நடிகர்- நடிகைகள் நடித்துள்ளனர். எம்.எஸ். ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து, இயக்கி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com