காதல் பாடல் எழுதுவது சவாலான விஷயம்: கார்க்கி

பல படங்களுக்கு பாடல் எழுதி வரும் கார்க்கி, காதல் பாடல் எழுதுவது சவாலான விஷயம் என்று கூறியிருக்கிறார்.
காதல் பாடல் எழுதுவது சவாலான விஷயம்: கார்க்கி
Published on

தற்போது பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார் கார்க்கி. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் ‘இதயனே...’ என்ற பாடலை எழுதி இருக்கிறார். இந்த பாடல் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.

இது குறித்து கார்க்கி கூறும்போது, ‘காதல் பாடல் எழுதுவது என்பது எப்போதுமே சவாலான விஷயம். பாடல் வரிகள் மிகவும் சாதாரணமாகவும், அதே சமயம் ரசிகர்களை உடனடியாக கவரும் விதமாகவும் இருக்க வேண்டும். இரு ஆன்மாக்கள் உண்மையான காதலின் தேடலில் இருக்கும்போது இணைந்து, வழிந்தோடும் அழகான கவிதை பிறப்பதை பற்றி பேசுகிறது இதயனே பாடல். இருள், பொய்கள் மற்றும் எதிர்மறையான விஷயங்களை நேர்மறையான ஒளி அழிப்பதை பாடல் வரிகள் வலியுறுத்த வேண்டும். அனிருத் எப்போதுமே பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவரின் லேசான வாத்தியமும், சிறப்பான இசையும் பாடலை வேறு தளத்துக்கு நகர்த்தி சென்று விடும்.

சிவகார்த்திகேயன், அனிருத் இணை, இசை ரசிகர்களுக்கு சிறந்த காதல் பாடல்களை அயராது பரிசளித்திருக்கிறார்கள். இதுவும் என்னுடைய பொறுப்பை உணர்த்தி, அவர்களின் வெற்றியை தக்க வைக்க கடுமையான உழைப்பை கொடுக்க என்னை உந்தியது’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com