மாவட்டம் தோறும் மகளிர் கோர்ட்டு: முதல்-அமைச்சரிடம் வரலட்சுமி நேரில் வலியுறுத்தல்

மாவட்டம் தோறும் மகளிர் கோர்ட்டு நிறுவ வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் நடிகை வரலட்சுமி நேரில் சென்று வலியுறுத்தி உள்ளார்.
மாவட்டம் தோறும் மகளிர் கோர்ட்டு: முதல்-அமைச்சரிடம் வரலட்சுமி நேரில் வலியுறுத்தல்
Published on

சென்னை தலைமைச் செயலகத்துக்கு நடிகை வரலட்சுமி வந்திருந்தார். அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு வரலட்சுமி பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மகளிர் கோர்ட்டு நிறுவ வேண்டும் என்று நாங்கள் நடத்தி வரும் பிரசார இயக்கம் சார்பில் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையின் நிலை என்ன என்பதை அறிவதற்காக இங்கு வந்தேன். அந்த கோரிக்கை சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். மேலும் ஐகோர்ட்டுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் கோர்ட்டு சம்பந்தமான எங்கள் கோரிக்கை இந்த அளவில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com