படம் ரிலீஸ் ஆனவுடன் தியேட்டரை மூடுகிறார்களே: கண்ணீர் விட்ட இயக்குநர்

திங்கட்கிழமை முதல் தியேட்டர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், ‘படம் ரிலீஸ் ஆவதற்குள் தியேட்டரை மூடுகிறார்களே’ என்று சினிமா இயக்குநர் கண்ணீர் உதிர்த்துள்ளார்.
படம் ரிலீஸ் ஆனவுடன் தியேட்டரை மூடுகிறார்களே: கண்ணீர் விட்ட இயக்குநர்
Published on

இதுகுறித்து கவுதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன் தனது ஆடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

அனைவருக்கும் வணக்கம். இவன் தந்திரன் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் பேசுகிறேன். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் திங்கட்கிழமை முதல் தியேட்டரை மூடுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படி எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் என்று தியேட்டர்களை மூடினால் என்ன செய்வது? படத்துக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது?

இயக்குனர்கள் விக்ரமன், செல்வமணி, சமுத்திரக்கனி ஆகியோர் இதற்கு உதவ வேண்டும். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு டைரக்டர் சங்கம்தான். நான் 25 வருடங்கள் திரை உலகில் இருக்கிறேன். படம் நன்றாக ஓடும் நிலையில் தியேட்டர்களை மூடுவது, குழந்தை பிறந்தவுடன் அதன் கழுத்தை அறுத்தது போல இருக்கிறது. என் படம் தொடர்ந்து ஓட உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறிய அவர் கதறி அழும் குரலும் இந்த ஆடியோவில் பதிவாகி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com