`சாமி-2'-க்கு பிறகு முன்னணி இயக்குநருடன் கைகோர்க்கும் விக்ரம்?

`துருவ நட்சத்திரம்', `சாமி-2' படத்திற்கு பிறகு விக்ரம் தமிழின் முன்னணி இயக்குநருடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
`சாமி-2'-க்கு பிறகு முன்னணி இயக்குநருடன் கைகோர்க்கும் விக்ரம்?
Published on

அந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமை சந்தித்து கே.வி.ஆனந்த் கதை கூறியதாகவும், விக்ரமுக்கு அந்த கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அஜித்தின் `வீரம்', விஜய்யின் `பைரவா' உள்ளிட்ட படங்களை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com