திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்

திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்

‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த விஷால் திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் என்று நடிகர் விஷால் மேடையில் மனம் திறந்து பேசினார். #MrChandramouli #GauthamKarthik
Published on

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில், நாயகியாக ரெஜினா கசாண்ட்ரா, வரலெட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் படக்குழுவினர், சூர்யா, விஷால், சாந்தணு, இயக்குநர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன், விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இதில் நடிகர் விஷால் பேசும் போது, 

ஒருவரின் குழந்தை பருவ ஆசையை நிறைவேற்றி வைப்பது என்பது பெரிய விஷயம். அந்த வகையில் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமாரின் ஆசையை தற்போது நிறைவேற்றி வைத்து மிஸ்டர்.சந்திரமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மிஸ்டர்.சந்திரமௌலி என்றாலே அது கார்த்திக் சார் தான். நடிகர் சங்கப் போராட்டத்தின் போது என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எனக்கு கார்த்திக் சார் உறுதுணையாக இருந்தார். 

சினிமா வேலைநிறுத்தத்தின் போது உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கான பெருமை அல்ல. இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை திருப்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயத்தை சாதித்துள்ளோம். எனது நண்பர் திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் இங்கு வந்தேன் என்றார். ஏற்கனவே திருவுடன் மூன்று படங்களில் இணைந்துவிட்டேன். மற்றொரு படத்திலும் விரைவில் இணைய இருக்கிறோம். #MrChandramouli #GauthamKarthik

X

Maalai Malar
www.maalaimalar.com