தூள், தில், சாமி... இப்போ சாமி ஸ்கொயர் - விக்ரம் நம்பிக்கை

ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், தூள், தில், சாமி படங்களுக்கு பிறகு சாமி ஸ்கொயர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். #SaamySquare #Vikram
தூள், தில், சாமி... இப்போ சாமி ஸ்கொயர் - விக்ரம் நம்பிக்கை
Published on

ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசியதாவது,

நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படம் சாமி. என்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக பெரிய ஆளாக நிறுத்தியதற்கு ஹரிக்கு நன்றி கூறினேன். கதை கேட்டு படத்தின் தலைப்பு கேட்டேன். சாமி என்று ஹரி சொல்லும் போதே எனக்கு ஒரு உத்வேகம் இருந்தது. பின்னர் அருள் படத்தில் இணைந்தோம். சாமி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி முன்பே பேசினோம். ஆனால் சும்மா தொடர்ச்சியாக இல்லாமல், ஒரு கதை அமைந்தால் பண்ணலாம் என்றேன். எத்தனை வருடம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று ஹரியிடம் சொன்னேன். 

முன்பு கதை சரியாக அமையவில்லை, தற்போது அமைந்துள்ளது. இது ஒரு சரியான நேரம் என்று தோன்றியது. தூள், தில், சாமி போன்ற படங்கள் பண்ணி ரொம்ப நாள் ஆகிவிட்டது. சாமி ஸ்கொயர் அந்த வகையில் எனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று நினைக்கிறேன். தவம் செய்வது போல, படத்திற்காக ஹரி ரொம்ப மெனக்கிட்டிருக்கிறார். #SaamySquare #Vikram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com