படப்பிடிப்பில் ஊக்கப்படுத்திய விக்ரம் - நெகிழும் மாஸ் ரவி

படப்பிடிப்பின் போது காலில் இருந்த காயத்தால் அவதிப்பட்டு வந்த வளர்ந்து தன்னை நடிகர் விக்ரம் ஊக்கப்படுத்தயது தன்னை நெகிழச் செய்ததாக நடிகர் மாஸ் ரவி கூறியிருக்கிறார்.
படப்பிடிப்பில் ஊக்கப்படுத்திய விக்ரம் - நெகிழும் மாஸ் ரவி
Published on

தான் `ஸ்கெட்ச்' படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தன்னை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியதாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

விக்ரம் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் 'ஸ்கெட்ச்.' இதில் விக்ரமுடன் மோதும் எதிர்தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி. ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி.

" நான் 12 ஆண்டுகள் சினிமாவில் போராடி வருகிறேன். இந்திய அளவில் சிறந்த நடிகராக விருது பெற்ற விக்ரம் சாருடன்நடிக்கப் போகிறோம் என்பதை நினைத்துப் பெருமையாக இருந்தது. அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விஜய் சந்தர் சாரை நான் என்றும் மறக்க மாட்டேன். பத்து படங்களில் நடித்த அனுபவத்தையும். புகழையும் அந்த ஒரு படத்தின் மூலம் பெற்றேன். காரணம் இயக்குநர் தான். இன்றைய இளைய தலைமுறையை நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கும் விக்ரம் சார் பெரிய நடிகர் மட்டுமல்ல பெருந்தன்மைக்கும் சொந்தக்காரர் என்பதை அவருடன் நடித்த போது நேரில் பார்த்த போது உணர்ந்து கொண்டேன்.

என் கேரக்டருக்கு யாரோ பெரிய நடிகரைக் கூட போட்டிருக்கலாம். என்னைப் போல ஒரு சிறிய நடிகனுடன் அவர் நடிக்கச் சம்மதித்தது பெரிய விஷயம். அது மட்டுமல்ல அவருடன் நான் சண்டைக் காட்சிகளில் மோதும் காட்சிகளில் நடிக்க சம்மதித்தது அவர் மனசால் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காட்டியது. உடன் நடிக்கும் போதும் சகஜமாகப் பேசினார். ஒரு தம்பியைப் போல அன்பு காட்டி ஊக்கம் கொடுத்தார்.

படப்பிடிப்பின் போது எனக்குக்  காலில் அடிபட்டு இருந்தது. அதை மறைத்தபடி நடித்தேன். நிறைய டேக் வாங்கினேன் - ஏன் என்று விசாரித்தார். காலில் அடிபட்டு இருந்ததைச் சொன்னேன். ஏன் என்னிடம் இதை முன்னாடியே சொல்லவில்லை? என்றார். அப்போது தன் காலைக் காட்டினார். அதிலும் பேண்டேஜ் போட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'ஸ்கெட்ச்' படத்தைப் பொறுத்தவரை  அது எனக்கு மறக்க முடியாத அனுபவம். தாணு சாரின் மிகப் பெரிய கம்பெனியில் பெரிய ஹீரோவுடன் நான் நடித்து பொங்கல் படமாக வெளியாகியிருப்பது எனக்கு பெருமையான விஷயம். ஏதோ கனவு போல நம்ப முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். " என்கிறார் மாஸ் ரவி.

இவர் நடித்து 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படங்கள் வெளியாகவுள்ளன.

இப்போது  சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் 'வெள்ளையானை' படம், திருமுருகன் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வரும் மாஸ் ரவி, மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மாஸ் ரவி டைரக்ஷனில் அன்லாக் குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. இக்குறும்படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி உள்ளனர் மாஸ் ரவிக்கு கூடுதல் மகிழ்ச்சி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com