மீண்டும் உளவு அதிகாரியான விக்ரம்

விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்தை நடித்து முடித்துள்ள சியான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பில் உளவு அதிகாரியாக பிசியாக நடித்து வருகிறார்.
மீண்டும் உளவு அதிகாரியான விக்ரம்
Published on

கவுதம் மேனனின் கனவு படமான `துருவ நட்சத்திரம்' அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், சதீஷ், டிடி, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பிரித்விராஜ் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் 2017 இறுதியில் அல்லது 2018 தொடக்கத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர விக்ரம் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் `சாமி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15-ல் தொடங்க இருக்கிறது.

அதற்கு முன்னதாக `துருவ நட்சத்திரம்' படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க கவுதம் மேனன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' வருகிற நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com