கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன்: விஜயலட்சுமி

கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன் என விஜயலட்சுமி கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை மேலும் விரிவாக பார்ப்போம்...
கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன்: விஜயலட்சுமி
Published on

நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்ன போது வீட்டில் அனைவரும் ஆதரவு கொடுத்தார்கள். படம் தயாரிக்க போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும், ‘ எதுக்கு’ ரிஸ்க் எடுக்கிற... இதெல்லாம் வேண்டாம் என்றார்கள்.

மேலும் ‘என் கணவர் பெரோஸ் மீதும் நம்பிக்கை இருந்ததால் நான் தயாரிப்பாளராக முடிவு செய்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக, பெருமையாக இருக்கிறது.


கிருஷ்ணா இதில் முதல் முறையாக அதிகமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். கதை எழுதும் போதே கயல் ஆனந்தி தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பெரோஸ் முடிவு செய்துவிட்டார். அவரது வேடம் சிறப்பாக வந்திருக்கிறது. ‘பருத்தி வீரன்’ சரவணன் மற்றொரு ஹீரோ போல் நடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com