விஜய் சேதுபதியின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #VijaySethupathi
விஜய் சேதுபதியின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கிதுரை பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவிருக்குகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் சர்வதேச அளவிலான ஒரு பிரச்சனையை பற்றி அலசுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் ஒன்று வடிவமைக்கப்படவுள்ளது. 

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் அதிக பட்ஜெட்டில் இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #VijaySethupathi

X

Maalai Malar
www.maalaimalar.com