யார் என்ன சொன்னாலும் அன்பாக இருப்போம் - விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் யார் என்ன சொன்னாலும் அன்பாக இருப்போம் என்று பதிவு செய்திருக்கிறார். #TSK #VigneshShivan
யார் என்ன சொன்னாலும் அன்பாக இருப்போம் - விக்னேஷ் சிவன்
Published on

சூர்யா நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இதற்கு பல பாராட்டுகள் வந்தாலும், ஒரு சில பேர் ஓடாத படத்திற்கு பரிசா என்றும், தோல்வியை மறைக்கவே பரிசு என்றும் கூறி வருகிறார்கள்.

இதையறிந்த விக்னேஷ் சிவன், ‘யார் என்ன சொன்னாலும் அன்பாக இருப்போம். என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு ஊக்கப்படுத்த பெரிய மனது வேண்டும். சூர்யாவின் பரிசுக்கும் அன்புக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com