நயன்தாராவை நினைத்து பெருமை படும் விக்னேஷ் சிவன்

நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில், நயன்தாராவை நினைத்து பெருமை படுவதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். #Nayanthara #VigneshShivan
நயன்தாராவை நினைத்து பெருமை படும் விக்னேஷ் சிவன்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தில் ‘ஒரே ஒரு...’என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். தற்போது விக்னேஷ் சிவன், நயன்தாராவை நினைத்து பெருமைப்படுவதாக கூறியிருக்கிறார். மேலும் உனது நம்பிக்கை, புதிய திறமை மீதான நம்பிக்கை, புதிய ஸ்கிரிப்ட் மற்றும் திரையில் நீ சென்று கொண்டிருக்கும் பாதை ஆகியவை உண்மையில் ஊக்கமளிக்கிறது. இந்த படத்தில் பாடல் எழுதியதற்கு சந்தோஷப்படுகிறேன் என்று பதிவு ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #KolamaavuKokila #Nayanthara

X

Maalai Malar
www.maalaimalar.com