கேரளாவில் வேலைக்காரனுக்கு கிடைத்த வரவேற்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு கேரளாவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
கேரளாவில் வேலைக்காரனுக்கு கிடைத்த வரவேற்பு
Published on

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான படம் 'வேலைக்காரன்'. இப்படம் திரை இடப்பட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாபெரும் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா கூறும்போது, ''நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் 'வேலைக்காரன்' படத்திற்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது ஸ்க்ரீன்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளிலும் 'வேலைக்காரன்' படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.  

சமுதாய அக்கறை கொண்ட நல்ல படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என்பது மறுபடியும் இப்படம் மூலம் நிரூபணமாகியுள்ளது. குடும்பங்களோடு திரையரங்கத்திற்கு மக்கள் வந்து இப்படத்தை ரசிப்பது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சமுதாய அக்கறை உள்ள கதையை ஜனரஞ்சகமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததில் எனக்கு பெரும் திருப்தி’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com