வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்

`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகியாக வைபவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்
Published on

சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கவிருக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்க இருப்பதாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் படக்குழு அதனை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க `சக்க போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்துள்ள வைபவி சாண்டில்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாலமுரளி பாலா இசையமைக்கும் இந்த படத்தை புளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வழங்குகிறார். தருண் பாலாஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் அடல்ட் ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com