அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படக்குழுவின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
Published on

சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்'.

ஹர்ஷினி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். 

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அம்ரஷ் இசையமைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com