திரிஷாவின் திடீர் முடிவு

தமிழ் சினிமாவில் 16 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா, திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
திரிஷாவின் திடீர் முடிவு
Published on

திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் முதல் படத்தில் பார்த்ததை போலவே அதே கட்டுடலுடன் அழகான தோற்றத்திலேயே இருக்கிறார்.

தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டி நடக்கிறது. சமூகம், பேய், திரில்லர், வழக்கமான கதாநாயகி என்று எல்லாம் கலந்து நடிக்கிறார் நயன்தாரா.

ஆனால் திரிஷாவோ இந்த போட்டியில் சற்று பின் தங்கி உள்ளார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நாயகி, மோகினி ஆகிய 2 பேய் படங்களுமே எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர் இனி பேய் படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.

கதைத் தேர்விலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் திரிஷா தன் வேலைகளை எப்படி அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கிறார் என்பதை அனிமே‌ஷன் கார்ட்டூன் வடிவில் ஒரு வீடியோவாக உருவாக்கி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com