சாமி படத்தில் மீண்டும் இணைந்தாரா திரிஷா?

சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிய திரிஷா, மீண்டும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சாமி படத்தில் மீண்டும் இணைந்தாரா திரிஷா?
Published on
விக்ரம்- திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இப்படத்தை ஹரி இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஹரி. இதற்கு ‘சாமி ஸ்கொயர்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் விக்ரம், திரிஷா, பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஷூட்டிங் தொடங்கிய நிலையில் திடீரென அவர் படத்திலிருந்து திரிஷா விலகிவிட்டார். சில கருத்து வேற்றுமையால் படத்திலிருந்து விலகிவிட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் இருப்பதாகவும் அதனாலேயே அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே கேரக்டரில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இது தொடர்பாக திரிஷா தரப்பில் கேட்டபோது, ‘படத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு இப்படியொரு தகவல் எப்படி வருகிறது என புரியவில்லை. சாமி 2வில் திரிஷா நடிக்கவில்லை’ என தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com