மெர்குரி ரிலீஸ் - டிக் டிக் டிக் தயாரிப்பாளர் கோபம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மெர்குரி படம் குறித்த தேதியில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெர்குரி ரிலீசால் டிக் டிக் டிக் தயாரிப்பாளர் கோபம் அடைந்திருக்கிறார். #Mercury
மெர்குரி ரிலீஸ் - டிக் டிக் டிக் தயாரிப்பாளர் கோபம்
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கும் மெர்குரி படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படஅதிபர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் புதுபடங்கள் ஏதும் ரிலீசாகவில்லை. 

இந்நிலையில், மெர்குரி படத்தை தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார். அதற்காக மெர்குரி படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியானது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், கார்த்திக் சுப்புராஜின் இந்த அறிவிப்புக்கு எதிராக கண்டங்கள் கிளம்பின. இதையடுத்து மெர்குரி டிரைலர் ரிலீசை தள்ளிவைக்கப்பட்டது. அதேநேரத்தில் படம் குறித்த நாளில் தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கார்த்திக்கின் டுவிட்டுக்கு டிக் டிக் டிக் படத்தின் தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவர்களது படத்திற்காக உழைத்து வருகிறார்கள். மெர்குரி படத்தை விட டிக் டிக் டிக் 3 மடங்கு செலவு அதிகமான படம். சைலண்ட் த்ரில்லர் படத்திற்கு ஏது மொழி. அதை அவர் தமிழில் மட்டும் ரிலீஸ் செய்ய மாட்டேன் என கூறுவது ஏற்கமுடியாதது. நாங்களும் எங்களது படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறோம். சில வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் முடிந்த பிறகு படத்தின் வேலைகள் துவங்கி படம் விரைவில் ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளார். 

இவ்வாறாக படத்தை ரிலீஸ் செய்ய கார்த்தி சுப்பராஜ் மும்முரமாக இருக்கும் நிலையில், படம் ரிலீசாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். #Mercury 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com