இந்த நாள் எப்போதுமே ஸ்பெஷல் தான் - பிரபாஸ் மகிழ்ச்சி

பாகுபலி-2 படத்தின் மூலம் இந்தியா முழுவதம் பிரபலமாகி இருக்கும் பிரபாஸ் பாகுபலி-2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போதுமே மறக்க முடியாத நாள் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #Baahubali2 #Prabhas
இந்த நாள் எப்போதுமே ஸ்பெஷல் தான் - பிரபாஸ் மகிழ்ச்சி
Published on

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான படம் பாகுபலி-2. 

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஓராண்டை நிறைவு செய்தது. இதுகுறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், நடிகர் பிரபாஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரபாஸ் கூறியிருப்பதாவது, 

`பாகுபலி-2 படம் ஓரண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான நாளாகும். எனது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த அழகான பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. ராஜமவுலி உள்ளி்ட்ட படக்குழுவனர் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்'

இவ்வாறு கூறியிருக்கிறார். 

தற்போது வரை பாகுபலி-2 சுமார் 1700 கோடி வரை வசூல் செய்துள்ளது. சமீபத்தில் ஜப்பானிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. #Baahubali2 #Prabhas

X

Maalai Malar
www.maalaimalar.com