தமிழ் மக்களின் அன்புக்கு நன்றி: மஞ்சும்மல் இயக்குநர் நெகிழ்ச்சி

மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது.அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. - இயக்குனர் சிதம்பரம்
தமிழ் மக்களின் அன்புக்கு நன்றி: மஞ்சும்மல் இயக்குநர் நெகிழ்ச்சி
Published on

தமிழ் மக்களின் அன்புக்கு நன்றி: மஞ்சும்மல் இயக்குநர் நெகிழ்ச்சி

கடந்த சில நாட்களாகவே தமிழ் நாட்டில் எந்த சமூக ஊடகங்களை திறந்தாலும் "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது. இதுவரை மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மஞ்சும்மல் பாய்ஸ் 100 கோடியை தாண்டியுள்ளது. மலையாள சினிமாவில் வேகமாக 100 கோடி வசூல் செய்த படங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.

இரண்டு நாட்கள் முன்பு மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினர் சென்னை வந்திருந்தனர். தமிழ் திரையுலக பிரபலங்களான கமல், விக்ரம், தனுஷ், சித்தார்த் போன்றவர்களிடம் படம் தொடர்பாக பாராட்டுப் பெற்று இருந்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக "அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இத்திரைப்படம் வெற்றி பெறக் காரணமான தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" என்று அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com