தந்தை பெயரை காப்பாற்ற தம்பிராமையா மகன் கடுமையாக உழைத்தார்: இயக்குனர் பாராட்டு

தந்தை பெயரை காப்பாற்ற தம்பிராமையா மகன் மாபதி கடுமையாக உழைத்ததாக இயக்குனர் இன்பசேகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தந்தை பெயரை காப்பாற்ற தம்பிராமையா மகன் கடுமையாக உழைத்தார்: இயக்குனர் பாராட்டு
Published on

“வாழ்க்கை எங்கு ஆரம்பித்தது எப்படி போகும். எங்கே போய் நிற்கும் என்பதை யதார்த்தமாக சொல்லும் படம் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’. இந்த படத்தின் நாயகனாக தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்திருக்கிறார். இவர் நடிப்புக்கு புதுசு. என்றாலும், தந்தை பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். எனவே, அதற்காக கடுமையாக உழைத்தார். எந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் அதற்கு முதலிலேயே ஒத்திகை பார்த்து தயாராக இருப்பார். வசனங்களை கூட மனப்பாடமாக வைத்திருப்பார். மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

நாயகி ரேஷ்மா நம்ம வீட்டு தமிழ் பெண் போல அப்படியே பொருந்தினார்.

கேரள மாநிலம் ஆலப்புழையில் நாயகன், நாயகி ஜோடியாக ஒரு படகில் கடலில் தனியாக இருப்பது போன்று ஒரு காட்சி எடுத்தோம். படகை செலுத்தியவர். படகோட்டியின் உதவியாளர். அவரை வைத்து அந்த காட்சியை படமாக்குவதற்குள் போதும்... போதும்... என்று ஆகிவிட்டது. இது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com