`தானா சேர்ந்த கூட்டம்' - அடுத்த கட்டத்திற்கு தயாரான சூர்யா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
`தானா சேர்ந்த கூட்டம்' - அடுத்த கட்டத்திற்கு தயாரான சூர்யா
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா படத்தின் முதல் பாதிக்கான டப்பிங்க வசனங்களை முடித்து விட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பரில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்னதாக நவம்பரில் டீசரும், டிசம்பில் டிரைலரும் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com