தூக்க மாத்திரை சாப்பிட்டு பிரபல தெலுங்கு இயக்குனர் தற்கொலை முயற்சி

தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். #TeluguFilmDirector #Rajasimha #attemptssuicide
தூக்க மாத்திரை சாப்பிட்டு பிரபல தெலுங்கு இயக்குனர் தற்கொலை முயற்சி
Published on

மும்பை:

தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் ராஜசிம்ஹா. நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான். நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

அந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தடைபட்டு உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ராஜசிம்ஹா, மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் சினிமாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 'ராஜசிம்ஹா' மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் திடீர் என இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது. #TeluguFilmDirector #Rajasimha #attemptssuicide

X

Maalai Malar
www.maalaimalar.com