முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாக இருக்கும் தமிழ்படம் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முதல் போஸ்டரிலேயே படக்குழு தனது அட்ராசிட்டியை ஆரம்பித்திருக்கிறது.
Published on

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. 

இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர்  போஸ்ர் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அதிகாரப்பூர்வ திருட்டு பங்குதாரர்(Official Piracy Partner) தமிழ் ராக்கர்ஸ் என்றும் கலாய்த்துள்ளனர். 

இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மிர்ச்சி சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த  படத்தில், முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். 

சமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிய `விக்ரம் வேதா' படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com