`அபோகலிப்டா' பாணியில் உருவாகும் தமிழ் படம்

`அபோகலிப்டா' பாணியில் தமிழில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. அந்த படத்தை ஹரி கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.
`அபோகலிப்டா' பாணியில் உருவாகும் தமிழ் படம்
Published on

படத்தின் இயக்குனர் ஹரி கிருஷ்ணாவிடம் பேசுகையில், இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் `ஆறாம் வேற்றுமை' என பெயர் வைத்தோம். தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம்.

ஓர் இடம், ஓர் இனம், ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை..
மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது. ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான்... நாகரிக வாழ்க்கையை வாழ்கிறான்.

அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான். இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப் பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே போக வேண்டி இருந்தது. எல்லோருமே எங்களது முயற்சியையும் கதை பற்றிய நம்பிக்கையையும் மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com