உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்

சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு தினமும் பார்சலில் உணவு வழங்கி உதவி உள்ளார் யோகிபாபு பட தயாரிப்பாளர்.
ஏழை மக்களுக்கு உணவு வழங்கியபோது எடுத்த புகைப்படம்
ஏழை மக்களுக்கு உணவு வழங்கியபோது எடுத்த புகைப்படம்
Published on

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் உதவி வருகிறது.

இந்நிறுவனம், தற்போது தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகிபாபு நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு பார்சலில் உணவு மற்றும் ஜூஸ் வழங்கி வருகின்றனர். டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com