உங்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லையே விவேக் சார் - சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், விவேக்
சிவகார்த்திகேயன், விவேக்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “விவேக் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அமையவில்லையே. உங்களிடமிருந்து இருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் தவறவிட்டு விட்டேன். என்றென்றும் உங்களது பிரிவை உணர்வேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com