படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்

ஷங்கர் படத்தின் கதை தன்னுடையது என செல்லமுத்து என்ற உதவி இயக்குனர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.
ஷங்கர்
ஷங்கர்
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி உள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படம் என சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர்

இந்நிலையில், இப்படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள கதை தன்னுடையது என செல்லமுத்து என்ற உதவி இயக்குனர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com