இயற்கை, சினிமா இருக்கும் வரை வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் - விவேக் மறைவிற்கு செந்தில் உருக்கம்

எண்ணற்ற மரங்களை நட்ட விவேக் மறைவிற்கு காமெடி நடிகர் செந்தில் சினிமா இருக்கும் வரை வாழந்து கொண்டுதான் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.
விவேக் - செந்தில்
விவேக் - செந்தில்
Published on

தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.

இவரது மறைவிற்கு நடிகர் செந்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அன்பு தம்பி சின்னக்கலைவாணர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. நானும் அவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். சிறந்த கலைஞர். மிகவும் அன்பானவர். எண்ணற்ற மரங்களை நட்ட அவர், இயற்கை இருக்கும் வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். சினிமா இருக்கும் வரை அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு செந்தில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com